Saturday, July 7, 2018

Tirumala Thirupathi

திருப்பதி ஏழுமலையான் கோயில் அல்லது வெங்கடேஸ்வரா கோயில் நாட்டிலுள்ள மிகப்பழமையான புகழ் பெற்ற ஆன்மீக யாத்திரை ஸ்தலமாகும். இது திருவேங்கட மலையின் 7வது சிகரத்தில் வீற்றுள்ளது. புஷ்கரணி ஆற்றின் தெற்கே அமைந்துள்ள இந்த கோயில் முழுக்க முழுக்க திராவிட பாரம்பரிய கோயிற்கலை கட்டுமான அம்சங்களுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. 2.2 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த கோயிலின் உள்ளே 8 அடி உயர வெங்கடேஸ்வரர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஆனந்த நிலைய திவ்ய விமானம் எனும் தங்க பீடத்தின்மீது இந்த சிலை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த விக்கிரகத்தின் கண்களில் ஜொலிக்கும் மாணிக்க ரத்தினக்கற்கள் பொதிக்கப்பட்டுள்ளன. கற்பூரம் மற்றும் குங்குமம் போன்றவையும் இவற்றோடு சேர்த்து பொதிக்கப்பட்டிருக்கிறது. ஐதீக ஆசாரங்களின்படி வராஹஸ்வாமியை வணங்கிவிட்டு அதன் பின்னரே ஸ்ரீ வெங்கடேஸ்வரை தரிசிக்க வேண்டும் எனும் நெறி கடைபிடிக்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.



வாழ்வில் திருப்பம் நிச்சயம் என்று திருப்பதி தல தரிசனத்தைச் சொல்வார்கள். கலியுகத்தின் கண்கண்ட தெய்வமான திருமாலின் அற்புதமான திருத்தலம் இது. அவர், இந்தத் தலத்துக்கு வந்து அருள்பாலிப்பதும் கூட ஓர் உன்னதமான நிகழ்வுதான்!

காஸ்யப முனிவர், உலக நடப்புகளையெல்லாம் பார்த்து கலங்கித்தான் போனார். ‘கலியுகம் ரொம்ப மோசமாகிக் கொண்டிருக்கிறதே... அவதார நாயகன் திருமால், இன்னுமொரு அவதாரம் எடுத்து பூமிக்கு வந்தால்தான், பூலோகம் சொர்க்கமாகும்’ என நினைத்தார். எல்லா முனிவர்களையும் வரச் செய்தார். அவர்களின் துணையுடன் மிகப்பெரிய யாகம் ஒன்றை நடத்தினார்.

‘‘இந்த யாகத்தின் பலனையும் வீரியத்தையும் மாபெரும் சக்தியையும் மும்மூர்த்திகளில் எவர் சாந்தமூர்த்தியோ அவருக்கு சமர்ப்பிக்கப் போகிறோம்’ என்று நாரதரிடம் தெரிவித்தார் காஸ்யப முனிவர்.

அந்தப் பொறுப்பை பிருகு முனிவர் ஏற்றார். வைகுண்டம் சென்றார். ஆனால் அவரை கண்டுகொள்ளாமல் இருந்தார் திருமால். அதனால் கோபமும் அழுகையுமாய் திருமாலின் மார்பில் எட்டி உதைத்தார் பிருகு முனிவர். அப்போதும் பெருமாள் அமைதியாக இருந்தார். அதேநேரம் எந்தப் பாதம் உதைத்ததோ, அந்த பாதத்தை வருடிக் கொடுத்தார்.

பொறுமையும், அமைதியும் கொண்ட திருமாலுக்கே யாக பலன்களைத் தருவது என முனிவர்கள் முடிவெடுத்தனர். அதேவேளையில், திருமாலின் மார்பில் குடிகொண்டிருக்கும் மகாலட்சுமி, மார்பில் உதைத்த பிருகு முனிவரைத் தண்டியுங்கள் என்று பெருமாளிடம் சொன்னாள். அவரோ மறுத்துவிட்டார்.



லட்சுமி கோபம் கொண்டு பூலோகத்தை அடைந்தாள். தவத்தில் மூழ்கினாள். திருமகளைத் தேடி திருமாலும் பூமிக்கு வந்தார். வேங்கடமலைக்கு வந்தவர் புற்று ஒன்றில் கண்மூடி அமர்ந்தார். அவருக்கு பசித்தது!

அதை அறியாமல் இருப்பாளா மனைவி மகாலட்சுமி?! அதன்படி பிரம்மாவும் சிவனும், பசுவும் கன்றுமாக மாற, மகாலட்சுமி எஜமானி போல், அந்தப் பகுதியை ஆட்சிசெய்த மன்னனிடம் விற்கச் சென்றாள். மன்னன் பசுவையும் கன்றையும் காசு கொடுத்து வாங்கிக் கொண்டான்.

பசு மேய்ச்சலுக்குச் செல்லும்போது திருமால் இருந்த புற்றுக்குச் சென்று பால் சொரிந்தது. பால் குறைவது கண்டு அதிர்ந்த வேலையாள், பசுவின் பின்னே சென்று புற்றில் பால் சொரிவதைக் கண்டான். கோடரியால் புற்றைக் கலைக்க, பெருமாளின் தலையில் பட்டு ரத்தம் சிந்தியது. தன் காயம் தீர மூலிகை தேடிச் சென்ற பெருமாள், வராஹ மூர்த்தியின் ஆஸ்ரமத்தைக் கண்டார்.

முற்பிறவியில் கண்ணபிரானின் அன்னை யசோதாவாக பிறந்திருந்த யசோதை, அங்கே வகுளாதேவியாக இருந்தாள். பிள்ளையைக் கண்டு பூரித்தாள். சீனிவாசன் எனப் பெயரிட்டு அழைத்தாள். பசி போக்கினாள். இந்த காலகட்டத்தில், சந்திரிகிரி எனும் பகுதியை ஆட்சி செய்த ஆகாசராஜன், குழந்தை வரம் வேண்டி, தன் குலகுரு சுகமாமுனிவரின் ஆலோசனைப்படி புத்திர காமேஷ்டி யாகம் செய்ய நாள் குறித்தான்.

யாகம் செய்யும் இடத்தை சீராக்கி, சுத்தப்படுத்தும் வேளையில், பூமியில் புதைந்திருந்த பெட்டிக்குள் இருந்த தாமரையில், படுத்த நிலையில் ஒரு பெண் குழந்தை கிடைத்தது. அந்தக் குழந்தைக்கு பத்மாவதி எனப் பெயர்சூட்டினான் மன்னன். பத்மம் என்றால் தாமரை!

அதையடுத்த காலகட்டத்தில், சீனிவாசருக்கும் பத்மாவதிக்கும் திருமணம் இனிதே நடந்தது. சீனிவாசப்பெருமாள் கலியுகம் முடியும் வரை திருமலையிலேயே விக்கிரக வடிவில் இருந்து அருள்பாலித்து வருகிறார் எனச் சொல்கிறது ஸ்தல புராணம்!

திருப்பதி - தெரியாத அதிசயங்கள்

அறிந்து கொள்வோம்.

திருப்பதி செல்கிறோம், திருவேங்கடமுடையான் ஏழுமலை வாசனை வணங்கி மகிழ்கின்றோம்.

ஆனால் திருப்பதியில் நம்மில் சிலருக்குத் தெரியாத அதிசயங்கள், உண்மைகள்,
நடைமுறைகள் எவ்வளவோ உள்ளன.

அவற்றிவ் சிலவற்றை தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

பிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்
திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச் சிலையில் சிலிர்க்க வைக்கும்
ரகசியங்கள் உள்ளன.




அவைகளில் சில:.

1. திருப்பதி ஆலயத்திலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் "சிலாதோரணம்" என்ற
அபூர்வ பாறைகள் உள்ளன.

உலகத்திலேயே இந்த பாறைகள் இங்கு மட்டும் தான் உள்ளன.இந்த பாறைகளின் வயது
250 கோடி வருடம்.

ஏழுமலையானின் திருமேனியும், இந்த பாறைகளும் ஒரே விதமானவை.

2. ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு பச்சைக்கற்பூரம் சார்த்துகிறார்கள்.

இந்த பச்சைக்கற்பூரம் ஒரு இரசாயனம். அரிப்பைக் கொடுக்கும் ஒருவகை அமிலம்.

இந்த இரசாயனத்தை சாதாரணக்கருங்கல்லில் தடவினால் கருங்கல் வெடித்துவிடும்.

ஆனால், சிலாதாரணத்தில் உள்ள பாறைகளில் இதைத் தடவினால் அந்தப்பறைகள் பெடிப்பதில்லை.

ஏழுமலையாக் திருவுருவச்சிலைக்கு 365 நாளும் பச்சைக்கற்பூரம் தடவுகிறார்கள்.

ஆனாலும்வெடிப்புஏற்படுவதில்லை.

3. எந்தக் கருங்கல் சிலையானாலும் எங்காவது ஒர் இடத்தில் சிற்பியின்
உளிபட்டிருக்கும் இடம் தெரியும்.

உலோகச்சிலையானாலும் உலோ கத்தை உருக்கி வார்த்த இடம் தெரியும்.


ஏழுமலையான் திருவுருவச்சிலையில் அப்படி எதுவும் அடையாளம் தெரியவில்லை.

எந்த கருங்கல் சிலையை எடுத்துக்கொண்டாலும் சுரசுரப்பாக இருக்கும்.

ஆனால் ஏழுமலையான் திருமேனியில் நுணுக்க வேலைப்பாடுகள் எல்லாம் மெருகு
போடப்பட்டது போல் இருக்கின்றன.

ஏழுமலையான் விக்ரகத்தில் நெற்றிச்சுட்டி, காதணிகள், புருவங்கள்,
நாகாபரணங்கள் எல்லாம் நகைக்கு பாலீஷ் போட்டது போல் பளபளப்பாகஇருக்கின்றன.

4. ஏழுமலையான் திருவுருவச்சிலை எப்போதும் 110 டிகிரி ஃபாரன்கீட்
வெப்பத்தில் இருக்கிறது.

திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம்.

அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீர், பால் மற்றும் திரவியங்களால்
அபிஷேகம் செய்கிறார்கள்.

ஆனால், அபிஷேகம் முடிந்தவுடன் ஏழுமலையானுக்கு வியர்க்கிறது.

பீதாம்பரத்தால் வியர்வையை ஒற்றி எடுக்கிறார்கள்.

வியாழக்கிழமை அபிஷேகத்திற்கு முன்னதாக, நகைகளைக் கழற்றும் போது,
ஆபரணங்கள் எல்லாம் சூடாகக்கொதிக்கின்றன.

திருப்பதி ஆலயம், அதன் வழிபாடு, உண்டியல் வசூல், பூஜை முறைகள், சரித்திர
சம்பவங்கள் அனைத்தும் அதிசய நிகழ்வுகளாகஇருக்கின்றன.

1. திருப்பதி திருக்கோயில் சமையல்கட்டு மிககூம் பெரியதாகும்.

பொங்கல், தயிர்சாதம்,புளிச்சாதம், சித்ரான்னம், வடை, முறுக்கு, ஜிலேபி,
அதி ரசம், போளி, அப்பம், மெளகாரம், லட்டு, பாயசம், தோசை, ரவாகேசரி,
பாதாம்கேசரி, முந்திரிப்பருப்பு கேசரி போன்றவை தினமும் பெரிய அளவில்
தயார் செய்யப்படுகின்றன.

2. ஏழுமலையானுக்கு தினமும் ஒரு புதிய மண்சட்டி வாங்குகிறார்கள்.

இதில் தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்தியமும் கோவில்
கர்பக்கிருகத்திற்குக் குலசேகரப் படியைத் தாண்டாது.

வைரம், வைடூரியம், தங்கப்பாத்திரங்கள் எதுவும் குலசேகரப்படியைத் தாண்டச் செல்லாது.


ஆண்டவனுக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட எச்சில் மண்சட்டியும், தயிர்சாதமும்
ஒரு பக்தனுக்குக் கிடைக்கப் பெற்றால் அது மிகப்பெரிய பாக்கியமாகும்.

3. ஏழுமலையான் உடை 21 முழ நீளமும் 6 கிலோ எடையும் கொண்ட புடவை பட்டு
பீதாம்பரமாகும். இந்த ஆடையை கடையில் வாங்க முடியாது.


திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தில் 12500 ரூபாய் செலுத்த வேண்டும்.வாரத்தில்
ஒரு முறை வெள்ளிக்கிழமை அன்று மட்டும் தான் வஸ்திரம் சாத்துவார்கள்.

இது மேல் சாத்து வஸ்திரம். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு
மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

4. உள் சாத்து வஸ்திரம் ஒரு செட் இருபதாயிரம் ரூபாய் கட்டணமாகும்.ஒவ்வொரு
வெள்ளிக்கிழமையும் 15 வஸ்திரங்கள் சார்த்துவதற்கு சமர்ப்பிக்கப்படும்.

பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு பத்து வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

5. பக்தர்கள் சமர்பிக்கும் வஸ்திரங்கள் தவிர அரசாங்கம் சமர்பிக்கும் சீர்
வஸ்திரங்கள் ஆண்டுக்கு இரண்டு முறை சாத்தப்படுகிறது.

6. ஏழுமலை ஆண்டவனுக்கு அபிஷேகம் செய்ய இன்று கட்டணம் செலுத்தினால் மூன்று
ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.


7. அபிஷேகத்திற்காக ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்திலிருந்து
கஸ்தூரி, சைனாவிலிருந்து புனுகு, பாரிஸ் நகரத்திலிருந்து வாசனை
திரவியங்கள் முதலிய உயர்ந்த பொருட்கள் வரவழைக்கப்பட்டு,
தங்கத்தாம்பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்படும் 51 வட்டில் பால் அபிஷேகம்
செய்யப்படும். பிறகு கஸ்தூரி சாத்தி, புனுகு தடவப்படும், காலை 4,30 மணி
முதல் 5,30 மணி வரை அபிஷேகம்
நடைபெறுகிறது.

அபிஷேகத்திற்கு சுமார் ஒரு லட்ச ரூபாய் செலவு ஆகும்.

8. ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து பக்குவப்படுத்தப்பட்ட ரோஜா
மலர்கள் பக்தர்களால் திருப்பதிக்கு விமானத்தில் அனப்பி வைக்கப்படுகின்றன.

ஒரு ரோஜா மலரின் விலைசுமார் 80 ரூபாய்.

9. சீனாவிலிருந்து சீனச்சூடம், அகில், சந்தனம், அம்பர், தக்கோலம்,
இலவங்கம், குங்குமம், தமாலம், நிரியாசம் போன்ற வாசனைப் பொருட்கள்
ஏழுமலையான் திருக்கோயிலுக்காக அனுப்பப்படுகின்றன.


10. ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு ரூ.1000 கோடி, இவருயை நகைகளை
வைத்துக்கொள்ள இடம் இடமும் இல்லை.

சாத்துவதற்கு நேரமும் இல்லை.

அதனால் ஆண்டிற்கு ஒரு முறை உபரியாக உள்ள நகைகளை செய்தித்தாட்களில்
விளம்பரப்படுத்தி ஏலம் விடுகிறார்கள்.

11. ஏழுமலையானின் சாளக்கிராம தங்கமாலை

12கிலோ எடை.

இதை சாத்துவதற்கு மூன்று அர்ச்சகர்கள் தேவை. சூரிய கடாரி 5
கிலோ எடை.

பாதக்கவசம் 375 கிலோ.

கோவிலில் இருக்கும் ஒற்றைக்கல் நீலம் உலகில் யாரிடமும் கிடையாது.

இதன் மதிப்பு ரூ.100 கோடி.

12. மாமன்னர்களான இராசேந்திர சோழர், கிருஷ்ண தேவராயர், அச்சதராயர் போன்றோர்.

ஏழுமலையானுக்கு பல காணிக்கைகளையும், அறக்கட்டளைகளையும் செய்து அவற்றை
கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் பொறித்துள்ளனர்.